கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார், கடந்த 2021 அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று, மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவு, கன்னட திரையுலகம் மட்டுமில்லாது, ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மத்தியிலும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அவரது தீவிர ரசிகர்கள் வேதனையின் உச்சத்திற்கே சென்று, கண்ணீர் வடிக்கத் தொடங்கினர். இன்று வரையிலும், அவரது சமாதிக்கு, ரசிகிரகள் தொடர்ந்து சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புனீத்தின் நல்ல மனசு
அது மட்டுமில்லாமல், பல இந்திய சினிமா பிரபலங்களும் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர். நடிப்பில் மட்டுமில்லாமல், பல ஏழை, எளிய மக்களுக்காக ஏராளமான உதவிகள் மற்றும் நன்கொடைகளை அவர் செய்து வந்துள்ளார். அது மட்டுமில்லாமல், தன்னனுடைய மறைவுக்கு பிறகு கண் தானமும் செய்ய ஒப்புக் கொண்டிருந்தார் புனீத் ராஜ்குமார்.
'ஜேம்ஸ்' திரைப்படம்
இந்நிலையில், அவரது பிறந்தநாளான இன்று (மார்ச் 17), புனித்தின் கடைசி திரைப்படமான 'ஜேம்ஸ்' சுமார் 4000 திரையரங்குகள் வரை வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அவரது திரைப்படத்தை நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், ஸ்க்ரீனில் அவரை பார்க்கும் போதெல்லாம், புனீத் மறையாமல் தங்களின் மனதில் சிரித்த முகத்துடன் என்றும் நினைவில் இருப்பார் என்றும் உருக்கத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர்.
பிறந்தநாள் வீடியோ
இதனிடையே, இன்னொரு பக்கம் புனீத் ராஜ்குமாரின் கடந்த ஆண்டு பிறந்தநாள் தினம் அன்று நடந்த சம்பவம் ஒன்று, ரசிகர்கள் மனதை இன்னும் உருக்குவதாய் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, புனீத் ராஜ்குமார் நடிப்பில், 'யுவரத்னா' என்னும் திரைப்படம், ஏப்ரல் 1 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.
இன்ப அதிர்ச்சி
திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக, மார்ச் 17 ஆ தேதி, அதாவது புனீத்தின் பிறந்தநாளன்று, யுவரத்னா படக்குழு ஒரு சிறப்பான ஏற்பாடை செய்திருந்தது. அதாவது, புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரின் பின்னால் வந்து நிற்கும் புனீத், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது தான் அது.
மீண்டும் உருகும் ரசிகர்கள்
தங்களுடைய ஹீரோ அருகே நிற்பதைக் கண்டதும், அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் ஸ்தம்பித்து நிற்கின்றனர் ரசிகர்கள். ஆனால், அந்த ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் தெரியாது, அது புனீத்தின் கடைசி பிறந்தநாள் என்று. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்த புனீத் ராஜ்குமார் வீடியோக்களை, தற்போதைய பிறந்தநாளில், கண்ணீருடன் அவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.