“புகழ் சினிமாவுக்கு போயிட்டா எங்கள மறந்துடுவீங்களா?"... ரசிகரின் கேள்விக்கு புகழ் எமோஷனல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது. அதிலும் முக்கியமாக புகழுக்கு தனியே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

pugazh emotional with his fans ரசிகரின் கேள்விக்கு புகழ் எமோஷனல்

இந்நிலையில் நடிகர் புகழுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றனர். தற்போது சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் மற்றும் குக் வித் கோமாளி ஷுட்டிங் என்று புகழ் படு பிஸியாக வளம் வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தற்போது அவரை ஒரு மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் குக் வித் கோமாளி அஷ்வினும் இதே சாதனையை செய்திருந்தார். இந்நிலையில் இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து விட்டனர். இந்நிலையில் அவர்களுடன் செல்பி எடுத்து கேக் ஊட்டி சந்தோஷத்தை  பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ரசிகர் ஒருவர் "நீங்கள் சினிமா துறைக்கு சென்று விட்டீர்கள் உங்கள் பழைய ரசிகர்களை மறந்து விடுவீர்களா?" என்று கேட்டதற்கு, "அங்கேயும் நீங்கள்தான் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதனால் எப்படி மறப்பேன்" என்று எமோஷனலாக கூறியுள்ளார்.

“புகழ் சினிமாவுக்கு போயிட்டா எங்கள மறந்துடுவீங்களா?"... ரசிகரின் கேள்விக்கு புகழ் எமோஷனல்..! வீடியோ

Tags : Pugazh

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pugazh emotional with his fans ரசிகரின் கேள்விக்கு புகழ் எமோஷனல்

People looking for online information on Pugazh will find this news story useful.