Reliable Software
www.garudavega.com

VIDEO: "சார்.. மொதல்ல நீங்க மாஸ்க் போடுங்க".. காரில் சென்ற புகழ்.. பாலா அட்ராசிட்டி.. தரமான சம்பவம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள் புகழ் மற்றும் பாலா இருவரும். இதில் பாலா பஞ்ச் பாலா என புகழப்படும் அளவுக்கு கவுண்டர்களை தெறிக்கவிடுபவர், இதேபோல் புகழ் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிகளில் பெண் வேடத்தில் அனைவரையும் கவர்ந்தவர். 

Pugazh Bala Social message wearing mask cute video

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கோமாளிகளாக கலந்துகொண்டு பலரையும் கவர்ந்தனர். அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில் புகழ், பாலா என இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் திரைப்படங்களில் பிஸியாகி வருகின்றனர். 

Pugazh Bala Social message wearing mask cute video

குறிப்பாக புகழ் சிம்புவின் மாநாடு, விஜய் சேதுபதி - பொன் ராம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம், அஸிவினுடன் இணைந்து ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

Pugazh Bala Social message wearing mask cute video

இந்நிலையில் தான் புகழ், பாலா இருவரும் காரில் ஒரு ஜாலி ரெய்டு போகும்போது வழியில் ஒரு போலீஸார் இவர்களை மடக்கி, லாக்டவுனில் ஏன் காரணம் இன்றி வெளியே சுற்றுகிறீர்கள் என வினவ, புகழும் பாலாவும் அவருடன் டிவி ஷோ என விளக்கம் கூற, அவரோ மாஸ்க் கூட அணியாமல் இருவரையும் காவலர் பாணியில் விரட்டுகிறார். 

Pugazh Bala Social message wearing mask cute video

ஒரு கட்டத்தில் மொதல்ல நீங்க மாஸ்க் போடுங்க என தங்களை மடக்கிய அந்த போலீஸ் காரரையே மடக்கும் தொனியில் பேசும் புகழும் பின்னர் அவர் தங்களுடைய நண்பர் என்றும் ஒரு விழிப்புணர்வு வீடியோ தான் இதுவென்றும் ரிவீல் செய்கின்றனர்.

Pugazh Bala Social message wearing mask cute video

அந்த போலீஸ் பாணியில் பேசிய நபரும் அனைவரும் விழிப்புடனும் பாதுகாப்புடணும் முறையான கோவிட் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற செய்ய வேண்டும் என்றும் அதுவே தங்களது சோஷியல் மெசேஜ் என்றும் கூறுகிறார். இந்த முழுமையான வீடியோவையும் புகழ், பாலாவின் அட்ராசிட்டியையும் இணைப்பில் காணலாம். 

VIDEO: "சார்.. மொதல்ல நீங்க மாஸ்க் போடுங்க".. காரில் சென்ற புகழ்.. பாலா அட்ராசிட்டி.. தரமான சம்பவம்!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pugazh Bala Social message wearing mask cute video

People looking for online information on Awareness, Bala, Behindwoods, Covid19, Mask, Pugazh, Pugazh and Bala, PunchBala, Social Message, VijayTelevisiom will find this news story useful.