www.garudavega.com

"அடிச்சு தொம்சம் பண்ணிடுவேன்! உங்க வீட்டு PETER PAUL-ஆ நான்?" கிழிக்கும் ரவிந்தர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பேசியது பற்றி தயாரிப்பாளர் ரவிந்தர் பளீச் பதில் கொடுத்துள்ளார். 

வனிதா விவகாரத்தில் தயாரிப்பாளர் ரவிந்தர் அதிரடி | producer ravindar blasts on vanitha vijaykumar marriage issue

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. இதை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் இந்த விஷயம் குறித்து பேசியது வைரலானது. அதில் தன்னை வனிதா மிரட்டிய வாட்சப் ஆடியோவையும் வெளியிட்டார். 

இந்நிலையில் ரவிந்தர் இந்த விவகாரம் குறித்து பேசியது பற்றி பளீச் பதில்கள் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது. ''நான் ஏன் வனிதா விஜயகுமார் விவகாரத்தில் தலையிடுகிறேன் என கேட்கிறார்கள். ஆனால் முதலில் எலிசபெத் ஹெலனின் பர்சனலை பற்றி பேசியது வனிதா. ஒரு பெண்ணுக்கு ஒரு பிரச்சனை என வரும் போது, அவருக்கு ஆதரவாக நிற்பதில் தவறில்லை. நான் ஒண்ணும் தனிமனித விமர்சனம் செய்யவில்லை. நடக்கும் எல்லாவற்றையும் இளம் வையது பசங்களும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு தவறான உதாரணம் ஆகிவிடும். விவகாரத்து வாங்காமல் அவர் பீட்டர் பாலுடன் வனிதா வாழ்வதே சட்டத்திற்கு எதிரான விஷயம். என்னை பற்றி பேசினால் அமைதியாக இருக்க, நான் ஒன்னும் அவங்க வீட்டு பீட்டர் பால் இல்ல., அப்படி ஒருத்தர் எங்க வீட்டுல இருந்தா அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்'' என அவர் தெரிவித்தார். 

மேலும் அவர் வனிதாவின் முன்னாள் கணவர்களில் ஒருவர் தனக்கு ஃபோன் செய்து பேசியதாகவும், பல இரகசியங்களை அவர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அதை பற்றி பேசுவதில் தனக்கு விருப்பமில்லை எனவும், வனிதா தன்னிடமும் மக்களிடம் இதுகுறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

 

"அடிச்சு தொம்சம் பண்ணிடுவேன்! உங்க வீட்டு PETER PAUL-ஆ நான்?" கிழிக்கும் ரவிந்தர். வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா விவகாரத்தில் தயாரிப்பாளர் ரவிந்தர் அதிரடி | producer ravindar blasts on vanitha vijaykumar marriage issue

People looking for online information on Ravindar Chandrasekaran, Vanitha, Vanitha Vijaykumar Marriage will find this news story useful.