விஜய்யின் தமிழன் படம் இயக்குநர் மஜித் தனக்கு உதவிய தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் 2002-ஆம் வெளியான திரைப்படம் தமிழன். ப்ரியங்கா சோப்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி, ரேவதி நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர்ஹிட் அடித்தது. இதனிடையே இயக்குநர் மஜித் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் தனது மருத்துவ செலவுகளுக்கு போதிய பணமின்றி தவித்துள்ளார்.
இதையடுத்து தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் கே.ஜெ.ஆர் ஸ்டூடியொஸ் நிறுவனர் ராஜேஷ், மஜித்தின் மருத்துவ செலவுகளுக்கு உதவியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் இருந்து குணமாகி, டிஸ்சார்ஜ் ஆகியுள்ள மஜித், தயாரிப்பாளர் ராஜேஷுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அறம், விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களை ராஜேஷ் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Majith, known for directing actor Vijay's #Tamizhan, has thanked producer @kjr_studios #Rajesh sir for paying his hospital dues and getting him discharged! Majith was undergoing treatment for #Covid19 at a private hospital. He got cured but had insufficient funds to pay bills. pic.twitter.com/FcGrLPDfIP
— Yuvraaj (@proyuvraaj) June 16, 2020