வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் கௌதம் மேனனுக்கு விலையுயர்ந்த பைக்கை பரிசளித்துள்ளார்.
Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் முருகன் பாடல்.. புதிய ஸ்டில்களுடன் வெளியான LYRICAL VIDEO! வேறலெவல்
வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளராக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு புதிய கிளாசிக் 350 பைக்கை பரிசளித்துள்ளார். நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் GVM Fans Festival நிகழ்ச்சியில் கௌதம் மேனன் & ஐசரி கணேஷ் கலந்து கொண்ட போது இந்த பரிசளிப்பு நடந்துள்ளது.
இந்த ராயல் என்ஃபீல்டு புதிய கிளாசிக் மாடல் இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆனது 349சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 20.2 பிஎச்பி ஆற்றலையும் 27 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த கிளாசிக் 350 பைக் 195 கிலோ எடையும், 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் சேமிப்பு கலனை கொண்டது. லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரவல்லது.
Also Read | ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2.. வைரலாகும் படத்தின் BTS புகைப்படம்!