திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இனி எந்த திரைப்படங்களும் வெளியாகாது என்று அப்பகுதி விநியோகஸ்தர்கள் கூறியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பிஜிலி ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆக.15ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படம் ரிலீசாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை அப்படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து ஈரோட்டை சேர்ந்த விநியோகஸ்தர் வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து திருச்சி பகுதி விநியோக உரிமையை விநியோகஸ்தரான ஜி.தியாகராஜன் எம்.ஜி. அடிப்படையில் வாங்கியிருக்கிறார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உதவியுடன் தியாகராஜன் இந்த உரிமையை வாங்கியுள்ளார். இந்நிறுவனம் தற்போது ‘கோமாளி’ திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. இந்நிலையில், தியாகராஜன் அட்வான்ஸ் அடிப்படையில் விநியோகம் செய்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்த, திருச்சி பகுதி விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொடுத்த அட்வான்ஸை தியாகராஜனிடம் கேட்டுள்ளனர்.
இதற்கு நஷ்ட ஈடு கோரி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை தியாகராஜன் அனுகியுள்ளார். அவர்கள் இருவருமே தங்களுக்கு சம்மந்தம் இல்லை என கூற கோபமடைந்த தியாகராஜன், “மிஸ்டர் லோக்கல்' படத்தின் நஷ்டத்திற்கு ஈடு கட்டும்வரையில், 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' வெளியிடும் 'கோமாளி' படத்தை வெளியிட முடியாது” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒன்றுக் கூடி, ஞானவேல்ராஜா மற்றும் சக்திவேலன் பிரச்சனைகள் நாளை (ஆக்.14) மாலைக்குள் தீர்க்கப்படாத பட்சத்தில் இனி வரும் காலங்களில் எந்த ஒரு திரைப்படத்தினையும் திருச்சி ஏரியாவில் வெளியிடுவதாக வெளியிடுவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.