பிரியங்கா மோகன் தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Also Read | ஜான்வி கபூர் நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்.. பிரபல OTT-ல எப்போ ரிலீஸ்?
‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோ ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளார்.
கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் அறிமுகமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.
பிரியங்கா மோகன், தற்போது 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளை கவனித்துக் கொள்கிறது.
இந்நிலையில் பிரபல போட்டோகிராபர் கிரண் & ஆடை வடிவமைப்பாளர் , ஸ்டைலிஷ்ட் பல்லவி உடன் இணைந்து பிரியங்கா மோகன் போட்டோஷூட் நடத்தி உள்ளார். பல்லவி, விக்ரம், பீஸ்ட் படங்களின் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்து "Purple Haze" என பிரியங்கா அருள் மோகன் தலைப்பிட்டுள்ளார். பிரியங்கா மோகனின் இந்த போட்டோஷூட் உடைகளை சுரபி குப்தா வடிவமைத்துள்ளார்.
Also Read | ஜெயலலிதாவைத் தொடர்ந்து இந்திரா காந்தியாக மாறும் கங்கனா ரனாவத்.. வியக்க வைக்கும் LATEST அப்டேட்