www.garudavega.com

"மாஸ்டரை தான் கேமரால காட்டுவாங்க".. விக்ரமன் பெயரை ரச்சிதா சொன்னதும் பிரியங்காவின் கலாய்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று நடைபெற்று வந்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சயின் 6 ஆவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்து முடிந்தது.

Priyanka counter for Robert master after Rachitha answer

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரஜினி வீட்டில் "ஆன்மிக குரு ரவி ஷங்கர்".. விருந்தளித்து உபசரித்த லதா ரஜினிகாந்த்!

சுமார் 106 நாட்கள் நடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், எமோஷனல் என அனைத்தும் நிறைந்து விறுவிறுப்புடன் சென்றதால் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த பேச்சு அதிகம் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியே சென்றாலும் மக்கள் அனைவரும் அமோகமான வரவேற்பு கொடுத்ததும் வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்களை சுற்றி ஏராளமான கலகலப்பான விஷயங்களையும், எமோஷனலான தருணங்களும் அரங்கேறி இருந்தது. அந்த வகையில், ரச்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோரிடையே நடந்த உரையாடல் தொடர்பான விஷயம் அதிக வைரலாகி வருகிறது.

Priyanka counter for Robert master after Rachitha answer

Images are subject to © copyright to their respective owners.

பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு பவுலில் கேள்விகள் கொடுக்கப்பட்டு அதில் தங்கள் எடுக்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் பிரியங்கா அறிவுறுத்துகிறார்.

அப்போது ரச்சிதா எடுத்த கேள்வியில், "கோபிநாத் அண்ணா சொல்றது மாதிரி இப்படி ஒரு விஷயத்தை இவர் பண்ணதுனால இவர் எனக்கு காவியமா தெரியுறாருன்னா யாரு?" என்ற கேள்வி இருக்க, அனைவரும் ஜாலியாக ராபர்ட் மாஸ்டர் பெயரை தான் கூறுவார் என குறிப்பிட்டனர். ஆனால் அதற்கு பதிலளித்த ரச்சிதா, "ஆனா நான் இப்ப சொல்ல போற நபர் வந்து விக்ரமன் அவர்கள்" என தெரிவித்தார்.

Priyanka counter for Robert master after Rachitha answer

Images are subject to © copyright to their respective owners.

மேலும் விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் மரியாதை கொடுத்து பேசியதால் அவர் காவியமாக தெரிவதாக தன்னுடைய விளக்கத்தையும் ரச்சிதா கொடுத்திருந்தார். "நீ இப்படி பேசும் போது ஷார்ட் ஃபுல்லா மாஸ்டர் மேலயே இருக்கும்" என பிரியங்காவும் கலாய்த்து பேசினார்.

இதேபோல ராபர்ட் மாஸ்டருக்கு வந்த கேள்வியில், "எந்த சூழ்நிலையிலும் பிக் பாஸ் வீட்டுக்குள் இதை மட்டும் பண்ணிட கூடாதுன்னு நினைச்சு போனேன். ஆனா அத பண்ணிட்டேனே" என நினைக்கும் விஷயத்தை கூற வேண்டும் என இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் ராபர்ட் மாஸ்டர், "இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான். வெளியே இருந்து என் கேர்ள் ஃப்ரெண்ட் சொல்லி அனுப்புனது. இதை பாரு உள்ள போறே, நீ ஜாலியா விளையாடு, ஆனா அது மட்டும் பண்ணிடாதன்னு சொன்னாங்க ஆனா நான் அதை மட்டும் தான் பண்ணேன்" என கூறியதும் காதல் வளர்த்தேன் என்ற பாடல் பின்னால் ஒளிபரப்பாக ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட அனைவரும் சிரிக்கவும் செய்கின்றனர்.

Also Read | காதலரை முதல் முறையாக அறிமுகம் செய்த பிக்பாஸ் ஆயிஷா.. இவர் தானா? செம்ம ஃபேமஸ் ஆச்சே!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka counter for Robert master after Rachitha answer

People looking for online information on Bigg Boss kondattam, Priyanka, Rachitha, Rachitha Mahalakshmi, Robert master will find this news story useful.