பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Also Read | விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. தெறி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான COUNTDOWN GLIMPSE!
2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 81 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது. இந்த வருட துவக்கத்தில் வாடகைத்தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தையும் பிறந்தது.
இந்த குழந்தைக்கு மால்தி என பெயரிட்டனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது பிரியங்கா சோப்ரா பதிவிடுவார். ஒரிரு முறை குழந்தையின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டுள்ளார். தற்போது பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் போட்டோவை வெளியிட்டுள்ளார். "யாரை விடவும் அதிகமாக நேசிக்கிறேன்" என தலைப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நடிகை கரினா கபூர், "PC & பேபி" என இதய எமோஜிக்களுடன் கமெண்ட் செய்து உள்ளார். பரிநிதி சோப்ரா "குழந்தையை மிஸ் செய்கிறேன்" என கூறியுள்ளார். அனுஷ்கா சர்மா, ப்ரீத்தி ஜிந்தா, சோனாலி பிந்த்ரே இதய எமோஜிக்களை கமெண்ட் செய்து உள்ளனர்.
Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் மலையாள ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரம்மாண்ட தயாரிப்பாளர்!