www.garudavega.com

குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.. வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரியங்கா சோப்ரா தனது குழந்தையின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Priyanka Chopra Shared Her Daughter Photo on Instagram

Also Read | Ponniyin Selvan: "Location அனுப்புங்க இளவரசி.." கார்த்தி ட்வீட்.. த்ரிஷாவின் செம பதில்..

2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட  10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

Priyanka Chopra Shared Her Daughter Photo on Instagram

அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 80 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

Priyanka Chopra Shared Her Daughter Photo on Instagram

கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது.  இந்த வருட துவக்கத்தில் வாடகைத்தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தையும் பிறந்தது.

Priyanka Chopra Shared Her Daughter Photo on Instagram

இந்த குழந்தைக்கு மால்தி என பெயரிட்டனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது பிரியங்கா சோப்ரா பதிவிடுவார். ஒரிரு முறை குழந்தையின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டுள்ளார். தற்போது பிரியங்கா சோப்ரா தனது நீண்ட கால தோழியுடன் நீர்நிலையில் அமர்ந்து குழந்தையை தாங்கி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Also Read | PHOTOS: கமலுக்கு அம்பேத்கர் - பெரியார் சிலைகளை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்..! பின்னணி தகவல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Chopra Shared Her Daughter Photo on Instagram

People looking for online information on பிரியங்கா சோப்ரா, Priyanka Chopra, Priyanka Chopra Shared Her Daughter Photo will find this news story useful.