மும்பை: பிரியங்கா சோப்ரா தம்பதியர் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பது பற்றி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 65 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது.
கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிரியங்கா சோப்ரா தம்பதியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர். மேலும் இந்த சிறப்பான தருணத்தை குடும்பத்துடன் செலவு செய்ய இருப்பதாகவும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பிரியங்கா சோப்ரா அறிவித்தார்.
இந்த டான்ஸ் ஸ்டெப் எப்படி இருக்கு? புஷ்பா படத்தின் சமந்தா பாடல்! வெளியான புதிய BTS வீடியோ...
இந்த வாடகை தாய் முறைக்கு வங்காள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஸ்லீமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஏழைப் பெண்கள் இருப்பதால் தான் வாடகைத் தாய் முறை இங்கு சாத்தியமாகிறது. பணக்காரர்கள் தங்கள் சொந்த நலனுக்காக மனித சமூகத்தின் ஒரு பகுதியினர் வறுமையில் இருப்பதையே விரும்புகின்றனர்.
பரபரப்பான பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. ஐதராபாத்தில் இருந்து வெளியான சர்ப்ரைஸ் ஃபோட்டோ!
நீங்கள் ஒரு குழந்தையை பெற முடியாதவராக இருந்தால் ஆதவரற்ற குழந்தையை தத்தெடுக்கலாம், வாடகை தாய் மூலம் பெறப்படும் குழந்தை முறையானது ஒருவகை சுயநல ஈகோ. இதுபோன்று ‘ரெடிமேட்’ குழந்தைகளை பெறுவதன் மூலம் அவர்கள் எப்படி உண்மையான பெற்றோராக இருக்க முடியும்? சாதாரண முறையில் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள், வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைகளுடன் எப்படி நெருங்கிய உறவை வைத்துக் கொள்ள முடியும்?’’ என்று தஸ்லிமா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.