நியூயார்க்கில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
2000-ஆம் ஆண்டு, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரியங்கா சோப்ரா, பின்னர் 2003-ல் இந்திப் படத்தில் நடிக்கத் தொடங்கினார். அத்துடன் ஆரம்ப காலத்தில் தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து 'தமிழன்' படத்தில் நடித்தார்.
2015-ல் உருவான, 'Quantico' எனும் ஹாலிவுட் தொடரில் நடிக்கத் தொடங்கிய ப்ரியங்கா சோப்ரா, 2018 வரை அத்தொடரில் நடித்தார். பின்னர் யு.எஸ் பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக 'தி வொயிட் டைகர்' படத்தில் தோன்றிய ப்ரியங்கா சோப்ரா, நியூயார்க் சிட்டியில் தற்போது 'சோனா' என்கிற பெயரில் ஒரு ரெஸ்டாரண்டை தொடங்கியுள்ளார்.
நடிப்பு, தயாரிப்பு என இயங்கிக் கொண்டே சொந்த ரெஸ்டோரண்டை திறந்துள்ள ப்ரியங்கா சோப்ரா, தமது உணவகத்தில் தனது நண்பர்களுடன் சென்று பானி பூரி சாப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.