திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியை ரசிகர்கள் Sync செய்த வீடியோவை பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார்.
Also Read | சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. மோஷன் போஸ்டர் எப்போ? மாஸ் அப்டேட்!
நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இப்படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றினார். இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் 19 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 35 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 28 திரையரங்குகளிலும், திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி மற்றும் மதுரை ஏரியாவில் தலா 38 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 39 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 25 திரையரங்குகளிலும் திருச்சிற்றம்பலம் படம் வெளியானது.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.
மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் 'ரஞ்சனி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், திருச்சிற்றம்பலம் படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ஒரு எமோஷனல் காட்சியை, ரசிகர்கள் வேறு ஒரு டிரெண்ட்டான (உனக்கு என்ன பிரச்சினை) வசனத்தை வைத்து Synchronisation செய்துள்ளனர். இந்த Sync வீடியோவை பகிர்ந்து, "வேற லெவல் Sync" என பதிவிட்டுள்ளார்.
Sync level 😂
Credits to the creator 🙌🏼 https://t.co/UJ9wYc2051
— Priya BhavaniShankar (@priya_Bshankar) September 8, 2022
Also Read | சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் நடிகை சாய் பல்லவி.. கூட இந்த நடிகை வேற இருக்காங்களா?