நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய சமீபத்தைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர அது கவனத்தை ஈர்த்துள்ளது.
சின்னத்திரை to சினிமா
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அப்போதே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து இப்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.
மான்ஸ்டர்
எஸ்.ஜே சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து அவர் நடிப்பில் அருண் விஜய்யுடன் மாபியா, ஒ மணப்பெண்ணே மற்றும் வெப் சீரிஸான பிளட் மணி ஆகியவற்றில் நடித்து தமிழில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. தமிழ் படங்கள் மட்டும் இல்லாமல் இப்போது தெலுங்கிலும் அவர் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
பிரியா பவானி சங்கரின் காதல்
சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் இப்போது அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படமும் அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜாலியான போட்டோஷூட்
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்ற்றுள்ளது. ஜொலிக்கும் உடையில் ஸ்டைலாக அந்த புகைப்படத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர் கேப்ஷனாக ‘அது ஒரு ஜாலியான போட்டோஷூட். ஆனால் நான் மட்டும் அதில் சிரிக்க அனுமதிக்கப்பட வில்லை’ என்று கூறியுள்ளார். இந்த புகைப்படமும் அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனும் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.