தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் ஐரோப்பிய நாடுகளில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
Also Read | INDIAN 2: இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள்.. தனக்கேயுரிய பாணியில் வாழ்த்திய உலகநாயகன் கமல்ஹாசன்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடந்த ஆண்டு ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் சோனி லிவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜியிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்ற பிரியா பவானி சங்கர் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை சுற்றிப் பார்த்தார். மேலும் பாரிஸ் நகர வீதிகளில் பிரான்ஸ் உணவுகளை சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
அடுத்து பிரான்ஸ் டூரை முடித்து கொண்டு அடுத்த நாடாக பெல்ஜியம் நாட்டிற்கு சென்றார். பெல்ஜியம் வீதிகளில் உலா வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பகிர்ந்தார். தற்போது அடுத்த நாடாக நெதர்லாந்து நாட்டிற்கு சென்று ஊர் சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.
திருச்சிற்றம்பலம் படம் நாளை ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Also Read | பிரபல யோகா ஆசிரியரை சந்தித்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் செம போட்டோஸ்!