www.garudavega.com
iTechUS

தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த்.. படம் குறித்து என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி வருகிறது.

Priya Anand Doing a Role in Lokesh Kanagaraj Vijay Thalapathy 67

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | தளபதி 67 படத்தின் ஷூட்டிங்.. தனி விமானத்தில் பிரபல நடிகையுடன் பயணமாகும் த்ரிஷா? செம அப்டேட்

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நேற்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது.

Priya Anand Doing a Role in Lokesh Kanagaraj Vijay Thalapathy 67

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Priya Anand Doing a Role in Lokesh Kanagaraj Vijay Thalapathy 67

Images are subject to © copyright to their respective owners.

  இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக போஸ்டரில், "தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்" என பிரியா ஆனந்த் கூறியுள்ளார் என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | தளபதி 67 படத்தின் ஒன்லைன்.. கதை கேட்ட பின் சஞ்சய் தத் சொன்ன செம விஷயம்! வைரல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priya Anand Doing a Role in Lokesh Kanagaraj Vijay Thalapathy 67

People looking for online information on Lokesh Kanagaraj, Priya Anand, Thalapathy 67 will find this news story useful.