நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். ஒரு அன்பான தந்தை, பயங்கர வில்லன், தீவிர அரசியல்வாதி, நம்பகமான நண்பர் என அவர் அனைத்து வகையான குணங்களையும் எளிதாக திரையில் கொண்டு வருபவர்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் கடைசியாக நெட்பிளிக்ஸில் வெளியான நவரசாவில் எதிரி என்ற தொகுப்பு படத்தில் நடித்தார். தெலுங்கில் பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படத்தில் கடைசியாக திரையில் காணப்பட்டார். இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட் படமான நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக் ஆகும். இது தவிர அவர் KGF அத்தியாயம் 2, புஷ்பா, அண்ணாத்தே, சர்க்காரு வாரி பட்டா, பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடிக்கிறார்.
இப்போது, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது உடல்நிலை குறித்து பகிர்ந்து கொள்ள தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதில் “ஒரு சிறிய வீழ்ச்சி .. ஒரு சிறிய எலும்பு முறிவு .. ஒரு அறுவை சிகிச்சைக்காக எனது நண்பர் டாக்டர் குருவாரெட்டியின் பாதுகாப்பான கைகளுக்காக ஹைதராபாத்துக்கு பறக்கிறேன். நான் நன்றாக இருப்பேன் கவலைப்பட ஒன்றுமில்லை .. என்னை உங்கள் எண்ணங்களில் வைத்திருங்கள்! ” என டிவிட் செய்துள்ளார்.
A small fall.. a tiny fracture.. flying to Hyderabad into the safe hands of my friend Dr Guruvareddy for a surgery. I will be fine nothing to worry .. keep me in your thoughts 😊😊😊🤗🤗🤗
— Prakash Raj (@prakashraaj) August 10, 2021