சென்னை : இயக்குனர் மற்றும் பாடலாசிரியரான கங்கை அமரனின் பிரேம்ஜி, நடிகர், பாடகர் என்று பன்முக திறமைகளை கொண்டுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இசையமைப்பாளர் மற்றும் அவரது சகோதரரான யுவன் சங்கர் ராஜாவிற்கு பல பாடல்களையும் பாடியுள்ளார்.
மாஸ் தொடக்கம்
ஆரம்பத்தில், சில படங்களில் ஒரு சில சீன்களில் நடித்திருந்தாலும், அதன்பின் சிம்புவின் வல்லவன் படத்தில் நயன்தாராவின் நண்பனாக நடித்ததன் மூலம் பிரபலாமாகி விட்டார். மேலும் தனது அண்ணன் வெங்கட்பிரபுவின் முதல் படமான சென்னை 600028 படத்தில் நடித்தார். அதன்பின் அவரது அண்ணன் இயக்கிய கோவா, சரோஜா படத்திலும் நடித்து பிரபலமானார். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் அஜித்தின் "மங்காத்தா" படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்திருப்பார். அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளிவந்த "பிரியாணி" மற்றும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த "மாசு என்கிற மாசிலாமணி" படத்திலும் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
இசையமைப்பாளர்
இவர் நடிப்பதில் மட்டும் இல்லாமல் இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவரது அண்ணன் இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திற்காக இசையமைத்துள்ளார். இப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டு இருக்கும் நிலையில், இப்பபடத்தில் நடிக்க முடியாததன் காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அண்ணன் இயக்கிய படத்தில் எல்லாம் நடித்த இவர், இப்படத்திற்கு இசையமைத்ததால் நடிக்கவில்லை என கூறியிருக்கிறார். பார்ட்டி படத்தில் ஜெய், ஜெயராம், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பலர் நடித்துள்ளனர். தற்போது அவரது அண்ணன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு வெற்றி
இந்நிலையில் நேற்று மாநாடு படத்தின் 25வது நாள் மற்றும் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் பேசியிருந்த அவர், என் அண்ணன் கோவ பட மாட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் அவர் கோபத்தை எல்லாம் என்னிடமே காட்டுவார் என ஜாலியாக கூறியிருந்தார். அதன்பின் அவரது அடுத்த படத்தில் ஸ்கிரிப்ட் எழுதும்போது ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்குவதற்கு நல்ல அருமையாக எழுத வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பின் பேசிய யுவன்சங்கர்ராஜா, மாநாடு படத்தின் வெற்றிக்கு முதலில் அப்படத்தின் தயாரிப்பாளர் கதையை புரிந்து கொண்டதே காரணம் என்றும், என் ரசிகர்கள் மற்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.