www.garudavega.com

"FULL விருந்து, அதுவும் ROLEX சூர்யா இருக்காரே" விக்ரம் படம் பாத்துட்டு.. பிரசாந்த் நீல் போட்ட TWEET

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் குறித்து, KGF பட இயக்குனர் பிரசாந்த் நீல் பகிர்ந்த ட்வீட், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Prashanth neel tweets about kamalhaasan vikram movie

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படம், மிகப் பெரிய அளவில் சக்கை போடு போட்டது.

கடந்த ஜூன் மாதம் 03 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி இருந்த விக்ரம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதுடன் மட்டுமில்லாமல், கலெக்ஷன் ரீதியாகவும் வசூல் வேட்டை நடத்தி இருந்தது.

விக்ரம் படம் பற்றிய ட்வீட்

இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி இருந்த 'விக்ரம்' திரைப்படம், தற்போதும் அதிக பார்வையாளர்களைக் கடந்து, ஓடிடி தளத்தில் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில், KGF திரைப்படம் மூலம் பிரபலம் ஆன இயக்குனர் பிரசாந்த் நீல், விக்ரம் படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Prashanth neel tweets about kamalhaasan vikram movie

மிரண்டு போன பிரசாந்த் நீல்

கன்னட நடிகர் யஷ் நடிப்பில், KGF 1 மற்றும் KGF 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி, இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து பல சாதனைகளை அடித்து நொறுக்கியது. இதனைத் தொடர்ந்து, KGF படத்தின் மூன்றாம் பாகத்தையும் பிரசாந்த் நீல் அடுத்து இயக்கவுள்ளார். இதனிடையே, விக்ரம் படம் குறித்த ஆக்ஷன் BTS வீடியோ ஒன்றை பகிர்ந்த பிரசாந்த் நீல், "விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். கமல்ஹாசன் சார், விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் ஆகியோரை ஒன்றாக பார்ப்பது ஒரு விருந்தாக அமைந்தது. எப்போதும் உங்கள் வேலையை பெரிதும் ரசிக்கிறேன் லோகேஷ் கனகராஜ். அனிருத் ஒரு ராக்ஸ்டார். எங்களின் அன்பறிவ் மாஸ்டர்களை நினைக்க பெருமையாக உள்ளது. நீங்கள் இருவரும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என பிரசாந்த் நீல் குறிப்பிட்டுள்ளார்.

Prashanth neel tweets about kamalhaasan vikram movie

அதே போல, விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த நடிகர் சூர்யாவின் Rolex கதாபாத்திரத்தில் இருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை என்றும் சூர்யாவின் நடிப்பால் மிரண்டு போய் பிரஷாந்த் நீல் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Prashanth neel tweets about kamalhaasan vikram movie

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prashanth neel tweets about kamalhaasan vikram movie

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Prashanth Neel, Vikram will find this news story useful.