நடிகர், இயக்குநர், தயாரிப்பாளரான தியாகராஜன் மற்றும் இவரது மகனும், நடிகருமான பிரசாந்த் முதல்வரை சந்தித்து கொரோனா பொது நிவாரணநிதி வழங்கினர்.
கொரோனா பெரும் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசோடு மக்களும் இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதே சமயம் கொரோனா பணிக்கான நிதியும் விருப்பமுள்ளவர்கள் கொடுக்கலாம் என்று அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் திரையுலகினர் பலரும் முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், இவரது மகனும், நடிகருமான பிரசாந்த் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர்.
அதன் பிறகு பேசிய அவர், "முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன். முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி". என தெரிவித்தார்.