www.garudavega.com

"என் உயிரே நீ தான்".. இதுவரை காணாத போட்டோக்களை வெளியிட்டு சினேகாவை வாழ்த்திய பிரசன்னா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் சினேகா & பிரசன்னா தம்பதியர் காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Prasanna Sneha Valentines day Instagram photos goes viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நெல்சன் அண்ணா அடிக்கடி ஒன்னு சொல்வாரு".. டாடா பட வெற்றி விழாவில் கவின் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் சினேகா. கமல், அஜித், விஜய், தனுஷ், சிலம்பரசன்  என  முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

Prasanna Sneha Valentines day Instagram photos goes viral

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னா, சினேகா தம்பதிகளுக்கு  விஹான் என்ற ஆண் குழந்தையும்  ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

Prasanna Sneha Valentines day Instagram photos goes viral

Images are subject to © copyright to their respective owners.

கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாஸ் படத்தில் சினேகா நடித்திருந்தார்.  மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் தற்போது சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவும் தற்போது துப்பறிவாளன் -2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prasanna Sneha Valentines day Instagram photos goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை சினேகா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரசன்னா உடன் தான் இருக்கும் இதுவரை வெளிவராத புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "15 வருடம் சேர்ந்திருந்தோம். இன்னும் பல வருடங்கள் போக வேண்டும். இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்" என பிரசன்னாவை டேக் செய்துள்ளார். பிரசன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "அவள் என்னவள், என் வீடு, என் இதயம், என் ஆன்மா, என் கூடு & மற்ற அனைத்தும் அவள் தான். காதலர் தின வாழ்த்துக்கள் ❤️" என கூறி பிரசன்னா சினேகாவை டேக் செய்துள்ளார்.

Also Read | கணவர் ஆதிக்கு செல்லப் பெயர் வைத்து வாழ்த்திய நிக்கி கல்ராணி 😍.. காதலர் தின ஸ்பெஷல்!

"என் உயிரே நீ தான்".. இதுவரை காணாத போட்டோக்களை வெளியிட்டு சினேகாவை வாழ்த்திய பிரசன்னா! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prasanna Sneha Valentines day Instagram photos goes viral

People looking for online information on Prasanna, Prasanna Sneha Valentines day, Sneha will find this news story useful.