இந்த லாக்டவுனில் பிரபலங்கள் பலரும் தங்கள் பொழுதை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது அவர்களது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சூரியன் மறையும் பொழுதில் என் மகனுடன். மேலும் என் மனைவியும் மகளும் செய்த பீட்சாவை மகிழ்வுடன் சாப்பிடுகிறோம். இந்த லாக்டவுனில் மகிழ்வான தருணங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிகர் பிரகாஷ் ராஜ் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
Basking in the sunset with my son.. and relishing pizzas made by my darling wife n daughter in the farm.... quality time in lockdown... make out the best of life .. 🙏stay home . Stay safe pic.twitter.com/Cvz7cd3Dls
— Prakash Raj (@prakashraaj) April 22, 2020