தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி(ஏப்ரல் 20) கொரோனா வைரஸினால் 43 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 457 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், அதன் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வணிகம் சார்ந்த செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினக்கூலி பெரும் தொழிலாளர்கள் பெரிது அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்குதல், மாஸ்க் வழங்குதல் எஎன தங்களால் இயன்ற உதவிகளை பிரபலங்கள் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''என்னுடைய நிதி வளங்கள் குறைந்தாலும் கடன் வாங்கியாவது உதவி செய்வேன். காரணம் என்னால் மீண்டும் சம்பாதிக்கமுடியும் என்பது எனக்குத் தெரியும். ஒன்றாக போராடுவோம். வாழ்க்கைக்கு நீங்கள் திரும்பி கொடுங்கள்'' என்று குறிப்பிட்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
My financial resources depleting .. But Will take a loan and continue reaching out . BECAUSE I KNOW ....I CAN ALWAYS EARN AGAIN.. IF HUMANITY SURVIVES THESE DIFFICULT TIMES. .. #JustAsking 🙏Let’s fight this together.. let’s give back to life ..a #prakashrajfoundation initiative pic.twitter.com/7JHSLl4T9C
— Prakash Raj (@prakashraaj) April 20, 2020