விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
Also Read | வீடியோ காலில் விஜய் சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் தம்பதி.. "#Thalapathy66"-ல் தளபதி லுக் இதானோ..?.."
சமீபத்தில் இரண்டாவது சீசன் முடிவடைந்தது, அதில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ஷகிலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அஸ்வின் குமார், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, பவித்ரா, சிவாங்கி, புகழ் மற்றும் பாலா போன்ற அனைத்து நபர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவானது. CWC-ல் பங்குபெறுவதற்கு முன்பு அஸ்வின், துல்கர் சல்மான் நடித்த மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' (2015), துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்யா வர்மா' (2019) ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக "என்ன சொல்லப்போகிறாய்" எனும் படத்தில் அஸ்வின் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபு சாலமன் ஏற்கனவே விக்ரமை வைத்து கிங், தனுசை வைத்து தொடரி படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய மைனா, கும்கி படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.மைனா படத்திற்கு தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா, நடிகை கோவை சரளா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை Trident Arts ரவி தயாரிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடந்தது.
இந்த படத்தில் கோவை சரளா 90 வயது பட்டியாக நடிக்கிறார், தம்பி ராமையா பஸ் கண்டக்டராக நடிக்கிறார். இப்படத்தில் முழுக்க முழுக்க பஸ்ஸில் படமாக்கப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் எதார்த்தமான இடங்களை விரும்புவதாலும், மேலும் இந்த படத்தில் கணினி கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தாமல் லைவ் லொகேஷன் மற்றும் அசல் பஸ்ஸில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மைனா படத்தில் இது போல பஸ் காட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த புதிய படத்தின் தலைப்பு வரும் மே மாதம் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8