டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா. இவரது நடிப்பில்; அடுத்ததாக பஹீரா திரைப்படம் வெளியாக உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | முதல்ல "வாடா, போடா".. கடைசில "சார்".. விவேக் - மயில்சாமி நட்பு நடுவுல இப்டி ஒரு உல்டாவா?!!..
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், பஹீரா என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.
பஹீரா படத்தின் ட்ரைலர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி இருந்த சூழலில், அதன் பின்னர் பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது. அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்கள் முன்பாக, மார்ச் 03 ஆம் தேதியன்று பஹீரா திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்தில் பிரபு தேவாவுடன் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், நாசர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பாலரும் இணைந்து நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன், செல்வகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் எஸ் இசையமைத்துள்ளார். மேலும் பஹீரா படத்தின் புது ட்ரைலர் பிப்ரவரி 25 ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில், பஹீரா படத்தின் நடிகர் பிரபு தேவா மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில் பஹீரா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, பஹீரா திரைப்படத்தில் நிறைய வேடங்களில் பிரபு தேவா வருவது பற்றியும், பெண் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளது பற்றியும் நிறைய விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners.
பிரபு தேவா லேடி கெட்டப் போட்டது பற்றி பேசிய இயக்குனர் ஆதிக், "முதல்ல கதை சொல்லும் போது இந்த லேடி கெட்டப் பத்தி நாங்க மாஸ்டர்கிட்ட சொல்லல. அதுக்கப்புறம் இந்த மாதிரி ஒன்னு இருக்குன்னு Request பண்ணோம். அதுக்கான Situation கதைல இருக்கு. வேற ஒரு கெட்டப்ல போறதை விட இப்டி ஒரு கெட்டப்ல போனா எப்படி மாஸ்டர் இருக்கும்ன்னு கேட்டேன். இவன் நம்மளை விடமாட்டான் போல இருக்குன்னு மாஸ்டர் நெனச்சாரு. அதுக்கப்புறம் மாஸ்டர் வந்து லேடி கெட்டப் போட்டு வந்து நிக்கும் போது 'ப்பா'ன்னு இருந்துச்சு.
முதல்ல ஒரு காஸ்ட்யூம் கொடுத்துட்டோம். அத போட்டுட்டு வந்து மாஸ்டர் நின்னாரு. அது ஸ்லீவ்லஸ். மாஸ்டரோட Biceps தெரியுது. ஷூட் பண்ணிட்டு இருக்கோம், Biceps பயங்கரமா தெரியுது. அப்புறம் Request பண்ணி, கை ஃபுல்லா கவர் ஆகுற மாதிரி காஸ்ட்யூம் குடுத்தோம்" என தெரிவித்தார்.
Also Read | இசை அமைப்பாளர் தமனுடன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்.. பின்னணி என்ன?