கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபலங்களின் திருமணங்கள் கூட வெகு எளிமையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபாஸ் ஹீரோவாக நடித்த 'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜித்திற்கு நேற்று(02/08/2020 ) திருமணம் நடைபெற்றது.
இயக்குநர் சுஜித் பல் மருத்துவருமான ப்ரவள்ளிகா (Pravallika) வை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஹைதராபாத்தில் கரம் பிடித்தார். இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரது திருமண புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு திருமண வாழ்தத்து தெரிவித்தார். இதனையடுத்து சுஜித்தின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
Wishing my dear friend @sujeethsign a lifetime of happiness on the start of something so beautiful. May the two of them cherish their 'happily ever after' and grow to be in love. #Saaho #directorofSaaho
.
.
.#saahomovie #director #itsmyfriendswedding pic.twitter.com/9lUjgkDRx3
— Ghibran (@GhibranOfficial) August 2, 2020