www.garudavega.com

சூர்யாவின் ET படத்துடன் மோதும் பிரபாஸ்! வெளியான ராதே ஷியாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: ராதே ஷியாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

prabhas radhe shyam movie new release date announced

பிகினியில் மாளவிகா மோகனன்... ட்விட்டரில் ஜொல்லு விட்ட பிரேம்ஜி! வைரலாகும் ட்வீட்

'ராதே ஷியாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். 350 கோடி ரூபாய் செலவில் யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

prabhas radhe shyam movie new release date announced

இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் ஜனவரி 14, 2021 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

prabhas radhe shyam movie new release date announced

இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷியாம்' வெளியாகவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாக உள்ளது. இந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாக சூர்யா நடிப்பில் ET படம் மார்ச் 10 அன்று வெளியாக உள்ளது.

prabhas radhe shyam movie new release date announced

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை (Theatrical Rights) உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாடலின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம், சிங்கிள் பாடல்கள் வெளியான போதே ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

"வலிமை" ரிலீஸ் தேதி இது தான்! புதிய போஸ்டருடன் போனிகபூர் வெளியிட்ட OFFICIAL அப்டேட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas radhe shyam movie new release date announced

People looking for online information on பிரபாஸ், OTT, Pooja Hegde, Prabhas, Radhe Shyam, Radhe Shyam Release, Thaman S, Theatre, Udhayanidhi Stalin will find this news story useful.