நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானர். இவர் 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக சந்தானம் உடன் நடித்திருந்தார். வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரை நடிகராய் தெரிந்த பலருக்கும் இவர் ஒரு புகழ்பெற்ற தோல் மருத்துவர். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.
இதனையடுத்து அவரின் அவரின் இறுதிச்சடங்கில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் நடிகர் சந்தானம். மேலும் முகம் முழுக்க சோகமும் கண்ணீருமாக அவர் காணப்பட்டார். மேலும் நடிகர் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார். இந்தக் காட்சி பார்ப்பவர்கள் மனதை கரைக்கும் வண்ணம் இருந்தது.
சேது, சந்தானம் என்று சொல்லும் போதே அடுத்து பலருக்கும் ஞபகம் வரும் ஒரு பெயர் பவர் ஸ்டார். இவரும் நடிகர் சேதுவும் சேர்ந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா என மூன்று படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். இந்நிலையில் அவர் நடிகர் சேதுராமனின் மரணத்தை பற்றி கூறும் போது "யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம். நான் ஷூட்டிங்கில் செய்வதை பார்த்து அவர் மிகவும் ரசிப்பார். ஒரு நாள் அப்படி தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா பட ஷூட்டிங்கில் நான் செய்ததை பார்த்து 15 நிமிடம் விடாமல் சிரித்தார். நல்ல ஜாலியான மனிதர். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.