கடந்த மே மாதம் 27 ஆம் தேதி ஆஹா ஓட்டிட்டியில் நேரடி படமாக ரிலீஸ் ஆகி மக்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற போத்தனூர் தபால் நிலையம்.
பிரவீன் மற்றும் அஞ்சலி ராவ் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, ஆஹா ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் போத்தனூர் தபால் நிலையம்.
முன்னதாக இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனர்-நடிகர் பிரவீன் கூறுகையில், “அஞ்சலகத்தில் காசாளராக இருந்த என் அப்பாவிடம் பேசும்போது போத்தனூர் தபால் நிலையம் கதைக்கரு உருவானது. அவர் தனது அனுபவத்தை பகிர, அந்த பகிர்தல்கள் ஒரு கற்பனை நிறைந்த திரைப்படத்தை, உருவாக்க என்னைத் தூண்டியது. ” என்று குறிப்பிட்டிருந்தார்.
VFX மற்றும் அனிமேஷன் உலகில் 13 வருட அனுபவத்தின் காரணமாக, இயக்குனர்-நடிகர் பிரவீன் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படமான 'கோச்சடையான்' படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தார்.
முன்னதாக இயக்குநர் பிரவீன், அனைத்து முக்கிய கதாபாத்திரங்களின் ஆடைகளையும் வாஷிங் மெஷினை பயன்படுத்தாமல் தானே துவைத்த புகைப்படங்களையும், படத்தில் செட் வொர்க் முதலான பல பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தத புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். பிளாக் மேஜிக் பாக்கெட் கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பல அறிமுக இயக்குநர்களுக்கு நிறைய கற்றலை கொடுத்திருந்தது.
இந்நிலையில் இந்தத் திரைப்படம் 10 மில்லியன் பார்வையாளர்கள் நிமிடத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை கொண்டாடும் விதமாக அதன் இயக்குனரும் நடிகருமான பிரவீன் மற்றும் அதை தயாரித்த பேஷன் ஸ்டுடியோ சுந்தர் ராமன் மற்றும் ஜெயராம் மற்றும் ஆகா குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.