வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பல புதிய கலைஞர்களை உருவாக்கி வருகிறது. அப்படியே இணையசேவை விருத்தியடைந்த பொழுது யூடியூப் கலைஞர்கள் பலர் உருவாக ஆரம்பித்தனர். எருமை சாணி என்ற தனியார் சேனலில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த ஹரிஜா மிகவும் பிரபலம். ஒவ்வொரு வீடியோவின் இறுதியிலும் அவர் எருமை சாணி சேனல் நடிகர் விஜய்யை பார்த்து "போடா எரும சாணி" என்று திட்டுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அவருகென்று தனியாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கேரளாவில் பிறந்திருந்தாலும் அவர் வளர்ந்தது எல்லாம் ஊட்டி மற்றும் கோயம்புத்தூரில் தான்.
இந்நிலையில் அவர் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். கடந்த வருடம் ஹரிஜா அமர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் ஒரு ஷார்ட் பிலிம்மில் ஒன்றாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்குப் பிறகு அவரை எருமை சாணி சேனல் ரசிகர்கள் மிஸ் செய்தார்கள் என்றே சொல்லலாம். நடிகை ஹரிஜா தற்போது தனது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய வளைகாப்பு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.