பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வந்த நிலையில் கடுமையான ஊரடங்கினால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. பின்பு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக மீண்டும் திரும்பியது பிக்பாஸ். இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக்பாஸ் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆட்கள் தேர்வு தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சன் மியூசிக்கில் 10 வருடங்களுக்கும் மேல் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே அஞ்சனா. இவருக்கு அறிமுகம் என்பது தேவை இல்லை. ஏனென்றால் சன் மியூசிக் என்று சொன்னாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வருபவர்கள் அஞ்சனா மற்றும் மணிமேகலை தான். இந்நிலையில் நீண்ட வருடங்கள் சன் மியூசிக்கில் பணியாற்றிய அவர் பிரபு சால்மன் இயக்கத்தில் 'கயல்' படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரனை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்வீர்களா என்று கேட்க, அதற்கு பதிலளித்த அவர் "என்னால் என் குழந்தையை பிரிந்து அவ்வளவு நாள் இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.