கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறைகளை சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளிகளுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பினால் மறு அறிவிப்பு வரும் தமிழகத்தில் 19 ஆம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நடைபெறாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பிட சில பகுதிகளில் திரையரங்குகள் செயல்படாது என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் அஞ்சனா தனது ட்விட்டர் பக்கத்தில், '' எனது நண்பர் தனது திருமண நாளுக்காக மேக் மை டிரிப் மூலம் பயணம் ஒன்றை திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பினால் செல்லவில்லை. அதனால் தனது பயணத் தேதியை மாற்றிக்கொள்ள அந்த நிறுவனத்துக்கு ஆயிரம் தடவை அழைத்திருப்பார். ஆனால் முறையான பதிலில்லை. குறைந்தபட்சம் அதனை கேன்சல் செய்துவிட்டு அவரது பணத்தை திருப்பித்தரலாம்.
கொரோனா உலக அளவில் அச்சுறுத்திக்கொண்டிருக்க தனது இரண்டு வயது குழந்தையுடன் இருக்கும் எனது நண்பருக்கு இது தான் உங்கள் பதிலா ?'' என்று கேள்வி எழுப்பி அந்த நிறுவனத்துடனான உரையாடலை ஸ்கிரீன் ஷாட்டாக பகிர்ந்துள்ளார்.
friend of mine booked a holiday for her anniversary and cant make it coz of the corona issue!She calls @makemytrip like thousand times to modify the date nd save her hard earned money,no one responds! Atleast try to cancel it and give her a refund.its time to be nice to ppl😊
— Anjana Rangan (@AnjanaVJ) March 16, 2020