கொரோனா நேரத்தில் பல பிரபலங்களும் தங்கள் திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற வில்லன் நடிகர் ரகுல் தேவ், 7 வருட காதலியை மணப்பது பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். புகழ்பெற்ற இந்தி நடிகரான ரகுள் தேவ் தமிழில் நரசிம்மா, பரசுராம், மழை, முனி, ஆதவன், வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தனது ஃபேஷன் டிசைனர் காதலியோடு வசித்து வருவதைப் பற்றி வெளிப்படையாக பேசாத அவர் தற்போது மௌனம் கலைத்துள்ளார். அவர் கூறும்போது "நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவது உண்மைதான். ஆனால் இன்னும் திருமண வாழ்க்கை பற்றி முடிவு செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.