www.garudavega.com

பிரபல விஜய் டிவி நடிகருக்கு திருமணம் முடிந்தது... காதலியை மணந்தார்... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறிது சிறிதாக தளர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர்-நடிகைகள் பலரும் தங்களது திருமண நிகழ்ச்சிகளை தற்போது நடத்தி வருகின்றனர்.

Popular vijay tv actor married to his lover பிரபல விஜய் டிவி நடிகருக்கு திருமணம்

இந்நிலையில் பிரபல விஜய் டிவி நடிகரான ராஜு ஜெயமோகன் தற்போது தாரிகா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்  கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை, சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்தவர். மேலும் நட்புன்னா என்னன்னு தெரியுமா, துணை முதல்வர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் பொழுது "என்னுடன் இத்தனை நாட்கள் எல்லாவற்றிலும் துணையாக இருந்ததற்காக நன்றி. நாம் இருவரும் ஒன்றாக இருக்க தகுதியானவர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

Popular vijay tv actor married to his lover பிரபல விஜய் டிவி நடிகருக்கு திருமணம்

People looking for online information on Marriage, Raju jeyamohan will find this news story useful.