நடிகர் விஜய் உடன் 'நண்பன்' படத்தில் நடித்தவர் நடிகை இலியானா. இவர் தமிழில் 'கேடி' படம் மூலம் அறிமுகம் ஆகி, பின் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியில் செல்ல முடியாமல் தனித்திருக்கும் அவரை , மேலும் ஒரு பாரம் இறுத்தி இருக்கிறது. எனவே அதனை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். ஆம் சமீபத்தில் அவர் தனது மாமாவை இழந்துள்ளார். இதனால் மீள முடியாத துயரில் அவர் இருக்கிறார்.
இது பற்றி அவர் "நான் பார்த்ததில் மிகவும் அருமையான மனிதர் நீர். இந்த வார்த்தைகளை எழுதும் போதே எனக்கு வலிக்கிறது. நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் எங்களோடு இருந்திருக்கலாம்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.