பிரபல தொகுப்பாளர் தூக்கிட்டு தற்கொலை... அதிகரித்த கடன் தொல்லை...கொரோனா ஊரடங்கால் வந்த சோகம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டிவி தொகுப்பாளர் மன்மீட் கர்வால் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளார் முதல் கட்ட விசாரணையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அதிகரித்து வந்த லோன் மற்றும் கடன் தொல்லையால் அவர் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அவர்  மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

பிரபல தொகுப்பாளர் தூக்கிட்டு தற்கொலை கொரோனா ஊரடங்கால் வந்த சோகம் popular tv anchor dies due to increasing debts due to corona lockdown

இரண்டு மாதங்களாக லோன் மற்றும் வாடகை கட்டாத நிலையில் சூழ்நிலையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று குழப்பத்தில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் மனைவி சேர் விழும் சத்தம் கேட்டு அவரது அறைக்கு ஓடிச் சென்றபோது, அவர் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

வட இந்திய ஊடகங்களின் கிடைத்த தரவுகளின் படி அவர் தற்கொலை செய்துகொண்ட போது, சுற்றுப் புறத்தில் இருந்த ஒருவரும் கொரோனா பயத்தினால் அவருக்கு உதவி செய்யவில்லை என்று கூறியுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா நோயினால் மனிதநேயம் புதைக்கப்பட்ட இந்த கொடூர சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல தொகுப்பாளர் தூக்கிட்டு தற்கொலை கொரோனா ஊரடங்கால் வந்த சோகம் popular tv anchor dies due to increasing debts due to corona lockdown

People looking for online information on Corona, Lockdown, Manmeet Grewal, Suicide will find this news story useful.