www.garudavega.com

பிரபல டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா பாதிப்பு - ''ராத்திரி முழுக்க அழுதேன்...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாமான்யர்கள் என பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரும் கொரொனா வைரஸினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களை கவலையுற செய்துள்ளது.

Popular tv actress tested Coronavirus Positive ft Navya Swamy | பிரபல நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது

இதன் ஒரு பகுதியாக தெலுங்கு டிவி நடிகை நவ்யா சுவாமி என்பவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியாகியுள்ளதாம். இதுதொடர்பாக தனியார் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் முதலில் ஷூட்டிங்கில் பங்கேற்பதை நிறுத்திவிட்டேன்.

எனக்கு 3, 4 நாட்களாக தலைவலியும் உடல் சோர்வும் இருந்தது. என் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் பரிசோதனை செய்து கொண்டேன். பின்னர் வீட்டுக்கு செல்லும் போது நிறைய அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை. என்னுடைய அம்மா இப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறார். இது தொடர்பாக நிறைய பேசினார்கள். வாட்ஸ் அப் செய்தார்கள். என்று தெரிவித்துள்ளார்..

மற்ற செய்திகள்

Popular tv actress tested Coronavirus Positive ft Navya Swamy | பிரபல நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது

People looking for online information on Coronavirus, Covid-19, Navya Swamy will find this news story useful.