சமீபத்தில் கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த ரம்ஸி என்ற 24 வயது பெண், தனது காதலர் ஹாரிஸ் திருமணம் செய்துகொள்ள மறுத்ததன் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். ஹாரிஸும் ரம்ஸியும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ரம்ஸி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்ததாகவும், கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்துகொள்வேன் என ஹாரிஸ் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஹாரிஸின் அம்மா அஃபியா, அப்பா அப்துல் ஹாக்கிம், சகோதரர் அன்சர் முகமது, அவரது மனைவியும் பிரபல டிவி நடிகையுமான லக்ஷ்மி புரமோத்தும் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சொன்னபடி ஹாரிஸ் திருமணம் செய்துகொள்ளாததால் ரம்ஸி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறுதியாக ஹாரிஸுடன் ரம்ஸி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் டிவி நடிகை லக்ஷ்மி புரொமோத் ரம்ஸியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இருவரும் நிறைய டிக்டாக் வீடியோக்கள் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் லக்ஷ்மியை தொடர்புகொண்டு போலீஸ் விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை லக்ஷ்மி திடீரென தலைமறைவாகி விட்டாராம். இந்த வழக்கில் ஹாரிஸை திருமணம் செய்துகொள்ளவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியது உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.