அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள தேஜாவு திரைப்படத்தின் ரிலீஸ் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Also Read | இதான் ஜூராசிக் பார்க் படங்கள்ல கடைசி பார்ட்.. தமிழ்ல ரிலீஸ் ஆகுதா? எப்போ? மிஸ் பண்ணிடாதீங்க
தமிழ், தெலுங்கில் தேஜாவு…
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கலைஞர்கள்…
இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்க்கு, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, அருள் E சித்தார்த் படத்தொகுப்பை கையாண்டு வருகிறார். பிரதீப் தினேஷ் சண்டை பயிற்சியாளராகவும், வினோத் ரவீந்திரன் கலை இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றனர்.
ஃபர்ஸ்ட் லுக்கும் படப்பிடிப்பும்…
கடந்த ஆண்டே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பும் கடந்த ஆண்டே நிறைவுற்றது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீஸ் அப்டேட்…
இது சம்மந்தமாக தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் ஜூன் மாதம் திரையரங்குகளில் ‘தேஜாவு’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிள்ளது. ஒரு நிகழ்வு நடக்கும் அது முன்பே தனக்கு நடந்தது போல தோற்றமளிக்கும் ஒரு மனநிலையே தேஜாவு என சொல்லப்படுகிறது. இதை வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8