இயக்குநர் பாரதிராஜா அண்மையில் கொடுத்த பிரஸ் மீட்டை அடுத்து, அதுகுறித்து பிரபல தியேட்டர் உரிமையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தை திறந்த இயக்குநர் பாரதிராஜா, இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது திரையரங்கங்கள், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வைக்கப்படும் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். எங்கள் பொருளை OTT-ல் விற்பது எங்களின் உரிமை'' என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னையில் அமைந்துள்ள பிரபல வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஒரு படம் தயாரிப்பாளரின் பொருள் என்றால், தியேட்டர் எங்களின் பொருள். OTT-ல் நல்ல லாபம் இருக்கிறதென்றால், எதற்கு காத்திருக்கிறீர்கள். அதிலே படங்களை வெளியிட்ட லாபம் பார்க்க வேண்டியது தானே.?'' என அவர் பதிவிட்டுள்ளார்.
If a film is producers product , then the theatre is my product, so the terms are always negotiable & the same the same applies to OTT. So there is no way, just one segment can dictate terms.
If OTT giving the best offer, why still hold on, jus go ahead, sell & make max profit. https://t.co/FZItFI1G88
— Rakesh Gowthaman (@VettriTheatres) September 15, 2020