உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இந்த நாட்களை இருவரும் மகிழ்ச்சியாக கழித்து வந்தனர்.
இந்நிலையில் அங்கு நடந்த செயல்களை பகிரும் மணிமேகலைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. அப்படியே அவர் கிராமத்து வீட்டில் சாணி தெளித்து மெழுகும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் "எந்த வேலையும் அவமானம் இல்லைனு பண்றீங்களே. வெரி குட்" என்று பாராட்டி வருகின்றனர்.