இந்திய அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், நாளுக்கு நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த நோயின் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இது மக்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனா வைரஸினால் மரணமடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனா வைரஸ் என்னுடைய அண்ணனை எடுத்துக்கொண்டது. 59 வயதாகும் அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். நோய் தொற்று ஏற்பட்டு 5 நாட்களில் மரணமடைந்தார். அவரது மனைவியும் மகனும் கொரோனோ வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிறைய பேர் குணமாகி வருகின்றனர். ஒரு சிலர் உயிரை இழக்கின்றனர். நாங்கள் இப்பொழுது அதிர்ச்சியில் இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
This tweet was posted to make you aware of the deadly pandemic & wishing you all a safe life. We are doing our best to protect my brother's family who're tested +Ve. Please pray for their speedy recovery. Take care of yourself & your family friends. Just don't step out for now🙏 https://t.co/pi19OXqYMP
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) June 25, 2020