சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உடல் நலக்குறைவால் கவிஞர் பிறைசூடன் காலமானார்.
திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களை எழுதியவர் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் பிறைசூடன்.
குறிப்பாக நடந்தால் இரண்டடி, ஆட்டமா தேரோட்டமா, சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது என ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு, இளையராஜா உட்பட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுதியவர் கவிஞர் பிறை சூடன்.
இவை தவிர, 5000க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் எழுதியவரும், சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமான, கவிஞானி பிறைசூடன் 8.10.2021 மாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 65.
இஅவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். இவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.
சென்னை நெசப்பாக்கம், பெரியார் நகரில் உள்ள ஜகதாம்பாள் தெருவில் இருக்கும் அவரது இல்லத்தில் பிறைசூடனின் இறுதிச் சடங்கு நிகழ்கிறது. அண்மையில் தான் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.