சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு தமிழ் சினிமா பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் உயிரிழந்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் இச்சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், ''சாத்தான்குளத்தில் நடந்தது மிகவும் கொடுமையானது. இதில் சம்பந்தபட்டவர்கள் தண்டிக்கப்பட்டு, உயிரிழந்த அப்பாவி ஜீவன்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள் வைரஸை விட கொடுமையானவர்கள்'' என பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து வீடியோ பதிவை வெளியிட்ட பின்னணி பாடகி சுசீத்ரா, 'ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டது குறித்தும், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு நடந்தது போல இங்கும் நீதி கிடைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் பாடகி சின்மயி, ''இப்போது கேள்வி படும் விஷயங்களை நான் கமலின் தசாவதாரம் படத்தில் சொல்ல கேட்டிருக்கிறேன். அப்படியென்றால், நீண்ட காலமாகவே இந்த மூன்றாம் கட்ட ட்ரீட்மென்ட் நடந்து வருகிறது. ஆனால், இப்போது தான் இது முதல் முறையாக ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி பல்வேறு திரைப் பிரபலங்களும் இணையவாசிகளும், ஜெயராஜ் - ஃபெனிக்ஸ் மரணத்திற்கு நீதி வேண்டும் என #JusticeforJeyarajandFenix எனும் ஹாஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.
What happened in Saththankulam is HORRIBLE!! Insult to Humanism... The accused officials needs to be Punished and Justice has to be given to those poor souls.... Some Humans are more dangerous than Viruses!!#JusticeForJeyarajAndFenix
— karthik subbaraj (@karthiksubbaraj) June 25, 2020
I remember hearing the baton-in the anus reference for the first time in Dasavaratharam from the character Naidu. Which means this brutality and third degree has been around for a while. And perhaps this is the first time it has been reported.
— Chinmayi Sripaada (@Chinmayi) June 25, 2020
Please share & tag fwd so non-tamil-speaking people can understand what happened #JusticeforJayarajAndFenix @bhakisundar @ahmedmeeranoffl pic.twitter.com/nZ7klPzpsO
— suchi_mirchi (@suchislife2019) June 25, 2020