நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு என்றால் அது நிர்பயா வழக்கு தான். நிர்பயா என்ற இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்ற போது, கொடூரமாக கற்பழித்து கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணிக்கு 4 பெரும் தூக்கில் இடப்பட்டனர்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள நடுங்கி குஷ்பு "இத்தனை ஆண்டுகள் கழித்து அவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய குற்றம் நடக்கும்போது ஏன் இத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது?
கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. ஏன் அவர்களிடம் இவ்வளவு கனிவான போக்கைக் கையாண்டோம்? இறுதியில் இவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு தாய் என்ற முறையில் இந்த முடிவை வரவேற்கிறேன். ஆனால், தண்டனை வழங்குவதற்கு முன்பே இத்தனை வருடங்கள் குற்றவாளிகளைப் பாதுகாத்தால் அவர்களுக்கு எங்கிருந்து பயம் வரும்? உடனடியான நீதி தேவைப்படுகிறது" என்று கூறியுள்ளார்.