கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் பயன்பாட்டுக்கு வராததால் மக்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமான்யர்கள், பிரபலங்கள் என பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரையும் கொரோனா பாதிப்பு உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நோய் நமக்கு பாதிப்பை மட்டும் வழங்குவதில்லை. அதனை உங்களால் மற்றவர்களுக்கு உதவும் வாய்ப்பாக பார்க்க முடியும். எனக்கு கொரோனா பாதித்துள்ளது. அதனை போராடி வென்று பிளாஸ்மா கொடை வழங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.