கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல மாதங்கள் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கு சிறிதளவு தளர்வுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான பாப்ரி கோஷ் தற்போது திருமணம் செய்து உள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி, பாண்டவர் இல்லாம், சித்தி 2, பூவே உனக்காக, மகராசி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் சர்க்கார் படத்தில் தளபதி விஜய் உடனும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருப்பார். தற்போது அவர் பிசினஸ்மேன் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் பெங்காலி முறையில் நடைபெற்றது. உடன் நடிக்கும் சீரியல் நடிகர்கள் இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.