ஹரிஷ் கல்யாண் - விவேக் கூட்டணியில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் 'தாராள பிரபு'. படத்தை பார்த்த பலரும் ஹரிஷ் கல்யாண் மற்றும் விவேக்கின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகளை வருகிற மார்ச் 31 வரை மூட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் வெளியிட்டு அறிக்கையில், கொரோனா பரவாமல் பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.
கடந்த வாரம் எங்கள் படம் 'தாராள பிரபு' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் அரசு இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
தாராள பிரபு படத்துக்கு நீங்கள் அளித்த அன்பும் ஆதரவும் விமர்சனங்களுக்கும் நன்றி. இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இதே போல படம் மீண்டும் வெளியாகும் போது உங்கள் ஆதரவு தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Thank you all for the love & support ❤ #CoronaVirusOutbreak #DharalaPrabhu #Covid19 #Pandemic #HK pic.twitter.com/bDsUnzoSlz
— Harish kalyan (@iamharishkalyan) March 17, 2020