உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இதனால் பல துக்க செய்திகளை நாம் கேட்டு வருகிறோம். கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் அடைந்ததை தொடர்ந்து, புகழ்பெற்ற இசைக் கலைஞர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மரணமடைந்த செய்தி அனைவரையும் உலுக்கியது. அந்த காயம் ஆறுவதற்கு உள்ளாகவே மீண்டும் பழம்பெரும் பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் மரணம் அடைந்துள்ளார்.
1986-ல் வெளியான 'ஆன்குஷ்' படத்தின் மூலம் பிரபலமடைந்த பாடலாசிரியர் அபிலாஷ், வயிற்று நோயால் பாதிக்கப்பட்டதால் மும்பை குர்கானில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 74. அவரது மனைவி கூறுகையில், "மார்ச் மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதன் பிறகு அவர் வலிமையற்று உணர்ந்திருந்தார்... இதனால், நடக்கவும் சிரமப்பட்டார்,'' என்று கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.